ஆளியார் ( ஆழியார் ) சுற்றுலா

என் முதல் பெண்ணுக்கு நிச்சயதார்த்தத்திற்கான நாள் முடிவு செய்யப்பட்டபோது என் இளைய பெண் "அக்காகூட இனிமேல் டூர் போக முடியாதே! எங்காவது போக வேண்டுமே" என்று வருத்தப்பட்டாள். (ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் பன்னெர்கட்டா நேஷனல் பார்க், safari, பவானி சாகர், பண்டிப்பூர், flower show, நீலகிரி என்று போய் வந்தது வேறு விஷயம்! ) எனவே, ஒரு சின்ன டூர் போகலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் உறவினர்கள் (ஒன்று விட்ட காலாமா -சித்தி குடும்பம்) ஆழியாறில் வசிக்கின்றனர். மேலும் அங்கே guest house -ல் room book பண்ணித் தருவதாகக் கூறியிருந்தனர். ஆகையால் நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள் ஆளியாறு செல்வதென முடிவு செய்யப்பட்டது. ...